Solve the Group 4 2025 July TNPSC Group 4 / VAO previous year paper with the official answer key and detailed explanations in English and Tamil. 100 questions free — unlock the remaining 100 with Pro.
100 free preview
1.5 per question
Real exam time
Same as real exam
Toggle between Learn (see answers) and Practice (solve first) modes.
பிழையான தொடரைக் கண்டறிக.
வினைமுற்றுகளின் வகைகளோடு பொருத்துக :
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) அழிந்தது தீமை | 1. சினைப்பெயர் கொண்டது |
| (b) அற்றது பிறப்பு | 2. இடப்பெயர் கொண்டது |
| (c) நல்லது கை | 3. குணப்பெயர் கொண்டது |
| (d) குளிர்ந்தது நிலம் | 4. தொழிற்பெயர் கொண்டது |
செற்றம்' என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
‘பாடும் பாடல்’ என்ற சொற்கள் எந்த பெயரெச்ச வகையென்று காண்க.
‘நட’ என்னும் வேர்ச்சொல்லின் வழி உயர்த்தினை வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
“வை” எனும் வேற்றுச்சொல்லின் ஏவல் வினைமுற்றினைக் கண்டறிக.
கூற்று : ஒன்றைக் சுட்டிக் காட்ட வரும் எழுத்து்களுக்கு சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
காரணம் : எ, யா, ஆ, ஓ, ஏ என்பன சுட்டெழுத்துகளாக வந்து பிரவறைச் சுட்டுகிறது.
கூற்று: அப்பக்கம், இப்பக்கம், உப்பக்கம் என்பன சட்டுச் சொற்களாகும்.
காரணம்: இடப்பொருளைச் சுட்டுவதற்காக அ, இ, உ வந்துள்ளது.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
குறில், நெடில் சொற்களுக்குச் சரியான பொருளைக் கண்டறிக.
கணம் – காணம்
சரியான விடைக் குறிப்பைத் தேர்க :
கூற்று : 'தந்தப் பலகை' என்பதன் பொருள் 'கொடுத்த பலகை' என்பதாகும்.
காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையில் 'ப்' என்ற ஒற்றெழுத்து மிகுந்து வந்ததால் கொடுத்த பலகை என்னும் பொருளைக் குறித்தது.
பின்வருவனவற்றுள் சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி இவற்றை அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
பிழை திருத்துக:
கூற்று : ஒரு அணில் மரத்தில் ஏறியது.
காரணம் :உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னர் "ஓர்” பயன்படுத்த வேண்டும்.
ஊர்ப் பெயர்களோடு மரூஉ சொற்களைப் பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) தேவகோட்டை | 1. கோவை |
| (b) கோவன்புத்தூர் | 2. சோணாடு |
| (c) பூந்தமல்லி | 3. தேவோட்டை |
| (d) சோழநாடு | 4. பூனமல்லி |
இரு பொருள் தருக : 'தாரணி'
ஒரு பொருட் பன்மொழியில் "மீமிசை ஞாயிறு" என்னும் சொற்கள் உணர்த்தும் பொருளைக் கண்டறிக.
பொருந்தா சொல்லைக் கண்டறிதல்.
முரல், வகுலி, வாளை, வியாளம்
நன்னூல் குறிப்பிடும் ஓரெழுத்து ஒரு மொழிகள் 42 ஆகும். கழகத் தமிழ் அகராதி (1964), பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி (1925), வெற்றித் தமிழ் அகராதி (1992), ஆகிய இம்மூன்று அகராதிகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஓரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை?
.......... ............... உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை நாமே!
இப்பாடல் வரியில் உள்ள எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.
ஒருவர் அல்லது நூல் கூறும் கூற்றை விளக்குமிடத்து பயன்படுத்த வேண்டிய நிறுத்தற்குறியைக் கண்டறிக.
பொருத்துக :
| பட்டியல் I | பட்டியல் II |
| (a) சாந்து | 1. இழிதல் |
| (b) குருவி | 2. குடை |
| (c) சுனை | 3. ஓப்பு |
| (d) அருவி | 4. அரை |
ஒலி மரபைக் கண்டறிக.
"புள்"
பிழையற்ற நிகழ்காலத் தொடரைக் கண்டறிக.
கூற்று : யானைகள் விரைந்து ஓடியது.
காரணம் : யானைகள் என்ற பலவின்பால் பெயருக்கு 'அது' என்ற ஒன்றன்பால் விகுதியே இடம்பெற வேண்டும்.
பிறவினைத் தொடரைக் கண்டறிக
எவ்வகை வினை என்பதைக் கண்டறிக :
இரண்டாம் வேற்றுமையில் இருப்பது முதல் வேற்றுமையாகவும், முதல் வேற்றுமையில் இருப்பது மூன்றாம் வேற்றுமையாகவும் மாறும் வினை எப்போது நிகழும்
வரலாற்றியலில் 'Whitehall' என்னும் சொல்லிற்கு இணை கண்டறிக.
இணையான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக
| பட்டியல் I | பட்டியல் II |
| (a) Dark Fiber | 1. பின்னணி நிரவ் |
| (b) Demon | 2. அடர்த்தி |
| (c) Darkest | 3. மிகு இருள்மை |
| (d) Density | 4. இருட்டு இழை |
புவியியலில் "Advance" என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக.
பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) Pre-censorship | 1. உடைமை |
| (b) Possession | 2. முன் தணிக்கை |
| (c) Prescription | 3. முனைமம் |
| (d) Premium | 4. நீடனுபோகம் |
Veteran
Glacier -
'தனிமரம் காடாதல் இல்' என்ற பழமொழி உணர்த்தும் பொருள்
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
- இக்குறள் உணர்த்தும் பழமொழியைக் கண்டறிக.
மரபுத் தொடர்களுக்கு ஏற்ற பொருளைக் கண்டறிக.
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) அடரடி படரடி | 1. சித்தி அடைதல் |
| (b) அகட விகடம் | 2. உறுதியின்மை |
| (c) ஈரொட்டு | 3. தந்திரம் |
| (d) கை கூடுதல் | 4. பெருங்குழப்பம் |
மரபுத் தொடரைத் தேர்ந்தெடு காட்டில் சிங்கம் ________.யானை_______.
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் கண்டறிக.
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) அலை ஓய்ந்த கடல் போல் | 1. நடுங்குதல் |
| (b) அடியற்ற மரம் போல் | 2. மனம் உடைதல் |
| (c) மத்தில் அகப்பட்ட தயிர்போல் | 3. அமைதி |
| (d) புயலில் சிக்கிய பூங்கொடிபோல் | 4. வீழ்தல் |
உகிர்ச் சுற்றின் மேல் உலக்கை விழுந்தாற் போல இத்தொடரில் உகிர் சுற்று என்பது என்ன?
பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) Call book | 1. பதிவேடு வழங்கு குறிப்பேடு |
| (b) Record issue register | 2. வறியர் வழக்குப் பதிவேடு |
| (c) Pauper suit register | 3. செம்மைப்படி பதிவேடு |
| (d) Fair copy register | 4. மறுகவனிப்புப் பதிவேடு |
Adoring என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தமிழ்ச்சொல் கண்டறிக.
தோழன் என்று பொருள் தரும் காம்ரேட் என்ற சொல் எம்மொழியில் இருந்து பெறப்பட்டது?
சரியான இணையைக் கண்டறிக :
(1) தாராபாரதி - ஆசியஜோதி
(2) முடியரசன் - வீரகாவியம்
(3) கவிமணி - இதய ஒலி
(4) இரசிகமணி - விரல் நுனி வெளிச்சங்கள்
‘பூட்கை' என்ற சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் _________.
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப்பட்ட விதத்தைக் கண்டறிக.
பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) மருப்பு | 1. வழிவந்தோன் |
| (b) விரகு | 2. தந்திரம் |
| (c) மருகன் | 3. சிறிய அடி |
| (d) சீறடி | 4. யானைத் தந்தம் |
பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) மாணி | 1. பொன் |
| (b) மானி | 2. குள்ளன் |
| (c) கணகம் | 3. படை |
| (d) கனகம் | 4. மாமன் |
"கோறல், கொல்லுதல்" - போன்ற பொருள்களைத் தரக்கூடிய ஒரு சொல்லைக் கண்டறிக.
பறவை, பூ, நீக்கம், அழிவு ஆகிய பொருள்களைத் தரும் ஓர் எழுத்து
நாட்டில் பின்னால் நிகழப்போவதை முன்னரே அறிந்து கொள்பவரின் பெயர் ______________ என்ற பெயரால் அழைப்பர்.
குதிர்தல் - இணையான வேறு சொல்லறிக.
எழுத்துப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
ஆசிரியர் புகழினியாளிடம் வந்து கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார் இவ்வாக்கியத்தில் சரியான இடத்தில் கால்புள்ளி இடுக.
பொருத்துக:
| விலங்குகள் | இளமைப்பெயர் |
|---|---|
| (a) நவ்வி | 1. சினை |
| (b) முதலை | 2. ஓந்தி |
| (c) உடும்பு | 3. பார்ப்பு |
| (d) மீன், கெண்டை | 4. மறி |
புல்லின் உறுப்பைக் கண்டறிக.
அஃறிணைத் தொடரைக் கண்டறிக.
ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.
கீழ்க்காண்பவற்றுள் இடைச்சொல் தொடரைக் கண்டறிக.
"Visual Scanner"
பொறியியலில் "Anchorage" என்னும் ஆங்கிலச் சொல்லிற்குக் கலைச்சொல் தருக.
"Monopoly Control" என்ற கலைச்சொல்லிற்கான தமிழ்ச் சொல்லைத் தருக.
பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
| (a) Abulia | 1. சீழ்கட்டி |
| (b) Acomia | 2. உடல் வழுக்கை |
| (c) Abscess | 3. மன உறுதிக் குறைபாடு |
| (d) Alopecia Universalis | 4. தலை வழுக்கை |
தென்னிந்தியாவின் ஸ்பா' என்று அழைக்கப்படும் குற்றாலம் நவீன வசதிகளுடன் ரூ. 15.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். பெயரைச் சொல்லும்போதே உற்சாகம் பிறக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருவிகள் நிறைந்த பகுதி குற்றாலம். தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள 'தென்னிந்தியாவின் ஸ்பா' என்று அழைக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த குற்றால அருவிகளில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குற்றாலத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகள் ஏற்படுத்த ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.'தென்னிந்தியாவின் ஸ்பா' என்றழைக்கப்படும் அருவியைக் கண்டறிக.
தமிழ் வளர்ச்சித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2024-2025
1.6 - கனவு இல்லம் :
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு "கனவு இல்லம் திட்டம்" தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, சாகித்ய அகாதெமி, ஞானபீட விருது, தொல்காப்பியர் விருது, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது (தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு மட்டும்) மற்றும் நோபல் பரிசு இலக்கியம் (தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பணிகளுக்கு பெற்றிருப்பின்) ஆகிய விருதுகளைப் பெற்ற விருதாளர்களுக்கு 2021-2022-ஆம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் அதிகபட்சமாக 10 விருதாளர்களுக்கு வீடு வழங்கப்படுகிறது.
'கனவு இல்லத் திட்டத்தின்' சார்பாக ஒவ்வொரு நிதியாண்டிலும் எத்தனை விருதாளர்களுக்கு இல்லம் வழங்கப்படுகிறது என்பதைக் கண்டறிக.
"கடுகு சிறுத்தாலும் காரம் போகுமோ?" எனும் பழமொழியின் பொருள் கண்டறிக.
மரபுத் தொடருக்கு ஏற்ற பொருளைப் பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
| (a) கடன் கழித்தல் | 1. கலங்கல் நீர் |
| (b) கடை விரித்தல் | 2. முரண்படுதல் |
| (c) கட்சைக் கட்டுதல் | 3. தன் ஆற்றலைச் சொல்லுதல் |
| (d) கக்கல் கரிசல் | 4. மனமின்றிச் செய்தல் |
வேளைப் பிசகு - எனும் மரபுத் தொடரின் பொருள் தேர்க.
ஆப்பசைத்தக் குரங்கதனைப் போல' என்ற உவமைத்தொடர் உணர்த்தும் சரியான பொருளைக் கண்டறிக.
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல். [90-92]
இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ. சிதம்பரனார். வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர் வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் 'சுதேசி நாவாய்ச் சங்கம்' என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.
சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?
Continue this paper, plus get every question across all 48 TNPSC previous year papers with bilingual explanations, mock-exam mode and progress tracking.